samedi 8 mai 2021

தெருவின் விழிகள்

க.கலாமோகன்

ஓர் பெண்
அவள் நடக்கின்றாள்
நான் அவளுக்கு முன்னால்
நான் ஓடவில்லை
அவளின் முன் நான்
பஸ் நிலையத்தில்
அந்தக் காலையில்
அது வர 2 நிமிடங்கள் இருந்தன
பிந்தி வந்த அவள்
எனக்கு அருகில்
ஏன் ஓட்டம்?
ஏன் எனது கால்கள் வேகமாக
நடக்கின்றன?
நான் எனது ஓட்டத்தை
விரும்பாதிருந்தேன்
பஸ் வந்தது…
நான் முதலில் ஏறுவதா?
அவளின் பின்னால் நான்
அவள் ஓடவில்லை
அவளால் ஓடமுடியாது
தொடைகள் பெருத்திருந்தன
இந்தத் தொடைகள்
அவளது சுமையாக இருக்கும்
இந்தக் காலை வேளையில்
அவள் நடக்காது இருந்தால் ….?
எனது தொழிலை நினைக்காமல்
நான் அவளையே
பஸ்ஸில் பார்த்தேன்
அவளது முகம்
களைப்பாக இருந்தது
தொழில் தொழில்தாம்
ஆம்! களைப்பைத் தருவதே
எமது தொழில்கள்
மின்சார பில்களையும்
வீட்டு வாடகைகளையும்
கட்டுவதற்காக
தொழிலினால்
நாம் தொழிலாளர்கள் அல்ல
புதிய அடிமைகள்
அவளும் அடிமை
நானும் அடிமை
எனது தொடைகளோ சிறுத்திருந்தன
பெருத்திருந்தன அவளது
அவளை நான் ஒவ்வொரு
காலைகளிலும் காண்பேன்
மிகவும் மெதுவாக நடையோடு
மெத்ரோவுக்குள் (சுரங்க ரயில்) இறங்குவதால்
நான் அமைதியாகவே இறங்குவேன்
அவள் பின்
மெத்ரோவில் அவளது முகத்தை
மர்மமாகப் பார்க்கும் வேளையில்
தெருக்களின் விழிகள்
அவளுக்காக இரங்கியதா?
என்னைக் கேட்பதுண்டு
காலை மெத்ரோவுக்குள்
நிறையக் களைப்பான முகங்கள்
தூங்கியபடியும் விழித்தபடியும்
இளசுகளும் கிழடுகளும்
தொழிலுக்கு ஓடியபடி
இவர்களுக்குள் உதயமாகிய கவிதைகளும்
கனவுகளும் மெத்ரோவுக்குள்
நசுங்கியபடி, புதைந்தபடி
இந்த மெத்ரோவின் கதைகள்
தெருவின் விழிகளுக்குத் தெரியுமா?
காலைப் பயணங்களுள்
நிறைய வெளிநாட்டவர்கள்….
பலர் தூங்கியபடி
சில வேளைகளில்தான்
அவர்களது மொழிகளைக் கேட்பேன்
நிறையக் கறுப்பு ஆண்கள்
குர் ஆனைப் படித்தபடி
பல கறுப்புப் பெண்கள்
பைபிளைப் படித்தபடி
பல தமிழர்களின் கைகளில்
சினிமா, சேதிப் புத்தகங்கள்
சில கறுப்புப் பெண்கள்
போனில் இசையைத் தழுவியபடியும்
தூங்கியபடியும்
பல வெள்ளை ஆண்கள்
தமக்குத் தயாராகும்
வேலைக் களைப்புகளை
முகத்தில் தூக்கியபடி…
இந்த மெத்ரோவின்
இனங்களுள்
நான் எனது மனிதத்தையும்
இந்த மனிதத்தின்
வெண்மையானதும் வெறுப்பானதுமான
குறிகளைக் காண்கின்றேன்
தெரு மெத்ரோவில்
பயணம் செய்வதில்லை
அதனால்
நான் தெருவின் விழிகளா?
ஓர் அழகிய பெண்
தூங்கிக் கொண்டிருந்தாள்
முக்காடு அவளது முகத்தைக் கட்டியிருந்தது
முதலில் முகத்தைப் பார்த்தேன்
பின் முக்காட்டை
அவளது விழிகள் தூங்கியதால்
நான் அவளை ரசித்தேன்
ரசித்தல்….
தடுக்கப்படவேண்டியதல்ல
ரசித்தல்கள்
இப்போதும் தடை வலைகளுள்
தடைகள் தடைகள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு தேசங்களுக்குள்ளும்
மனிதர்களுக்குள்ளும்
ஒவ்வொரு அரசியல் முகங்களுக்குள்ளும்
முகாம்களுக்குள்ளும்
ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும்
வீதிகளுக்குள்ளும் தடைகள்
ரகசியமாக நான்
இந்தத் தடைகளை மீறுகின்றேன்
முக்காட்டுப் பெண்ணின்
முகம் மீது
எனது ரசனைப் பூக்களை
மெதுவாகத் தூவுகின்றேன்
வீதிகளிலும் மெத்ரோக்களிலும்
காணும் முக்காடுகள்
எனக்குக் கவிதைகள் ஆகுகின்றன
முக்காட்டுப் பெண்
என்னைப் பார்த்தாளா?
பார்வை விழிகளால் அல்ல
மனதிலும் நிறைய விழிகள் உள்ளன
இது எனது இதயத்தின் கருத்து
முக்காடு என் விழியை விட்டுப் பிரிந்தது
எனது மனதை விட்டு அல்ல
நான் அதனை வைத்து
ஓர் கதையை எழுத வெளிக்கிட்டேன்
“அணி”
தலைப்புக் கிடைத்து விட்டது
ஓர் வயோதிபப் பெண்ணின்
குறட்டை எனது கலைக் கதவுகளைத்
தட்டியது.
அவள் எனது அம்மம்மா போல
இந்த வயதிலும் வேலையா?
அவளது மடியின் மீது
ஓர் இலவசப் பத்திரிகை
ஆம்! ஒவ்வொரு நாடுகளிலும்
பத்திரிகைகள் இலவசமாக
வாழ்வுகள் நட்டத்துள்
வாசிப்பவர்களும்தாம்
இந்தப் பத்திரிகைகள்
முதலாளிகளை நக்குவன
ஓர் பெட்டி பால் வாங்கு
உனக்கு இரண்டு பெட்டிகள்
இலவசமாகக் கிடைக்கும்
ஓர் பைபிள் வாங்கு
உனக்கு ஓர் குர் ஆன் இலவசமாக…
முழுக்க முழுக்க விளம்பரங்கள்
எமது வாழ்வுகள் விளம்பரங்களாகவே
வியாபாரங்களாகவும்
தெருக்களின் சுவர்களிலும்
நிறைய விளம்பரங்கள்
அவைகளைத் தெருவின் வீதிகள்
வாசிக்கின்றனவா?
கிழவியின் இலவசப் பத்திரிகையைக்
களவாகப் பார்த்தேன்
அங்கு அரசியலும்
பொருளாதாரமும் தொடக்கப் பக்கங்களில்
மீதிப் பக்கங்களில்
விழிக்காமல் இருக்குமா விளம்பரங்கள்?
மெத்ரோ நிற்கின்றது
எனது இறங்கும் இடம்
கிழவிக்கு ரகசிய முத்தங்களைக்
கொடுத்துவிட்டு
வெளியே வருகின்றேன்
தெருவில் நிறைய மக்கள்
என்னிடம் கேட்கின்றேன்
தெருவின் விழிகள்
மூடப்பட்டுள்ளதா ?
திறபட்டுள்ளதா ?
ஒரு அழகிய இளம் பெண்
தெருவில் துப்பியபடி
மெத்ரோவுக்குள் இறங்குகின்றாள்
அவதியாக.
அவளது துப்பலைத்
தெருவின் விழிகள் பார்க்குமா?
(நன்றி: புதியகோடாங்கி)

mercredi 25 janvier 2012

The birds


Walls!
Nothing but walls -
Surround me.
How, then,
These Birds from my balcony -
Sing of freedom?


lundi 23 janvier 2012

Sold

everything is sold
in this world

I have seen people

selling their souls

I have seen the girls

selling their body

friend sells his friend

to the enemy
 

in this globalization

everything is for sale
including me too

but who will buy me?

jeudi 17 novembre 2011

mardi 15 novembre 2011

Il revient d'un combat


Il revient d'un combat
Et il repart
Pour revenir
D’un autre combat
Je ne pars pas
Et je reste avec mes mille combats

J'ai volé


J'ai volé
Les perles de la mer
Pour les faire voler
En plein jour

Venue de brousse


Venue de brousse
En ville
Tu repars à ton lieu
Les habits déchirés
Tes yeux abritent
Encore des étoiles

Je cause


Je cause
Avec l'eau
Pour voler
Ses perles

Je pince la lune


Je pince la lune
Par mes yeux
Pour devenir
Aveugle perpétuel
De la nuit

On m'a pêché


On m'a pêché
Dans l'eau pure
Pour que je marche
Dans la boue du temps

Le loup


Le loup
Entre en ville
Et on enterre la poésie
Dans la forêt